Homeசெய்திகள்சென்னைநாளை( டிச.9) பள்ளிகளை திறக்கக்கூடாது - தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு...

நாளை( டிச.9) பள்ளிகளை திறக்கக்கூடாது – தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு…

-

சென்னை வெள்ளம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை ( டிச.9) தனியார் பள்ளிகளை திறக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

வட தமிழகத்தை புரட்டிப்போட்ட ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் டிசம்பர் 04- ஆம் தேதி முதல் இன்று (டிசம்பர் 08- ஆம் தேதி) வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்திருந்தது. தொடர்ந்து நாளை ( டிச.9) மற்றும் நாளை மறுநாள் (டிச.10) சனி ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர், திங்கள் கிழமை முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே இயல்பு நிலைக்கு திரும்பிய தனியார் பள்ளிகள் நாளை ( சனிக்கிழமை) பள்ளிகளை திறக்கக்கூடும் என்பதால், அவ்வாறு திறக்கக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜன் முருகன் பிறப்பித்துள்ள உத்தரவில், “விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை ( டிச. 09) தனியார் பள்ளிகளை திறக்கக்கூடாது.” என தெரிவித்துள்ளார்.

MUST READ