- Advertisement -
அண்ணா பல்கலைகழகம் மாணவி வழக்கில் சிறையில் உள்ள ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை தொடங்கியது. சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் கூடத்தில் ஞானசேகரனிடம் குரல் பரிசோதனை தொடங்கியது. ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த எஸ்.ஐ.டி.க்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. ஞானசேகரன் சில நபர்களிடம் நடத்திய உரையாடலை உறுதிப்படுத்தவே இந்த குரல் மாதிரி பரிசோதனை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.