Homeசெய்திகள்சென்னைஅம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஆய்வு மேற்கொண்ட அண்ணாமலை!

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஆய்வு மேற்கொண்ட அண்ணாமலை!

-

- Advertisement -

நீரால் சூழ்ந்து உள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்த பாரதிய ஜனதா கட்சியின்  மாநில தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: ”அம்பத்தூர் தொழிற்சாலை சுமார் 1400 ஏக்கர் பரப்பளவு கொண்ட எம்.எஸ்.எம்.இ தொழில் நிறுவனங்கள் நிறைய இங்கு இருக்கின்றன இந்த நிறுவனங்கள் சுமார் 13,000 கோடி வருவாய் ஈட்டி தரக்கூடியவர்கள்.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஆய்வு மேற்கொண்ட அண்ணாமலை!

இங்கு உள்ள மெஷின்கள் எல்லாம் நீரால் சூழ்ந்து பழுதடைந்துள்ளதால் இவர்களுக்கு கோடி கணக்கில்   நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று ஆயிரம் நிறுவனங்கள் உள்ளதால் அனைத்துமே ஸ்தம்பித்து போய் நிற்கின்றது. இதனால் இவர்கள் உற்பத்தி பண்ண முடியாத சூழல் மேலும் இரண்டு மாதங்கள் ஆகும். இங்கு உள்ள மெஷின்கள் லோன் அடிப்படையில் வாங்கப்பட்டு தற்போது அவற்றுக்கு லோன் கட்ட முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஆய்வு மேற்கொண்ட அண்ணாமலை!

இரண்டாவதாக இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட வலியுறுத்துகிறோம். மேலும் மத்திய அமைச்சரிடம் நாளை சந்தித்து இது குறித்து தகவல் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களுடைய கோரிக்கையாக ரயில்வே துறையைச் சார்ந்த தடையின்மை சான்றிதழ் ஒன்றை அளித்துள்ளனர், அதனை ரயில்வே துறை அமைச்சரிடம் தெரிவித்து அந்த பணியை விரைவில் செய்து முடிக்கப்படும்.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஆய்வு மேற்கொண்ட அண்ணாமலை!

தொடர்ந்து இந்த தொழிற்சாலைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப எந்தெந்த வகையில் உதவி செய்ய முடியுமோ அந்தந்த வகையில் மனிதாபிமான அடிப்படையில் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என தெரிவித்தார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஆய்வு மேற்கொண்ட அண்ணாமலை!

இதனைத் தொடர்ந்து அம்பத்தூர் தொழிற்சாலைகள் சங்க அய்மா அலுவலகத்தில் சென்று அங்குள்ள நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை கலந்தாய்வு   செய்து பின் அவர்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

MUST READ