அதிக ஊட்டசத்து நிறைந்த பழங்களில் ஆப்பிள் பழமும் ஒன்று. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுபவர்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று பல உணவியல் நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.அப்படிப்பட்ட அதிக நார்சத்து கொண்ட ஆப்பிள் பழங்கள் சென்னை அம்பத்தூரில் இருந்து திருவேற்காடு செல்லும் சாலையில் அயப்பாக்கத்தில் சாலையோரத்தில் டன் கணக்கில் கொட்டப்பட்டு இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
சேமிப்பு கிடங்கில் இருந்து கெட்டுப் போன ஆப்பிள்களை கொண்டுவந்து இரவு நேரத்தில் இங்கு கொட்டப்பட்டு இருக்கலாம் என அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
https://www.apcnewstamil.com/news/chennai/explosion-in-metro-giant-pipe-motorists-suffer/92363
ஆப்பிள் பழம் ஒரு கிலோ 200 முதல் 300 வரை விற்கும் நிலையில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆப்பிள்கள் சாலையோரம் கொட்டப்பட்டு கிடப்பதை மக்கள் வேடிக்கை பார்த்து செல்வதோடு ஒரு சிலர் நல்ல பழத்தை தேடி எடுத்து செல்கின்றனர்.கொட்டப்படுள்ள ஆப்பிளால் அப்பகுயில் கொசுக்கள், பழ ஈக்கள் அதிகம் இருப்பதாகவும் இதனால் சாலையில் செல்பவர்களுக்கும் மற்றும் அப்பகுதி மக்களுக்கும் இடையூறு இருப்பதால் அதை அப்புறப்படுத்துமாறு அந்த பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.