Homeசெய்திகள்சென்னைஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... வடசென்னை ரவுடியின் மகன் அதிரடி கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… வடசென்னை ரவுடியின் மகன் அதிரடி கைது

-

- Advertisement -

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் 5-ம் தேதி மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் திருவேங்கடம் என்பவர், போலீஸாரால் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பொன்னை பாலு, அருள், ராமு, ஹரிதரன், சிவசக்தி ஆகியோரை போலிசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட அருள் அளித்த வாக்குமுலத்தின் அடிப்படையில் வடசென்னை ரவுடி நகேந்திரனின் மகனான அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

 

 

 

 

 

MUST READ