Homeசெய்திகள்சென்னைபணம் கொடுத்தே பாஜகவில் பொறுப்பு வாங்கினேன்! ஆருத்ரா கோல்டு மோசடி ஹரீஷ் வாக்குமூலம்

பணம் கொடுத்தே பாஜகவில் பொறுப்பு வாங்கினேன்! ஆருத்ரா கோல்டு மோசடி ஹரீஷ் வாக்குமூலம்

-

- Advertisement -

பணம் கொடுத்தே பாஜகவில் பொறுப்பு வாங்கினேன்! ஆருத்ரா கோல்டு மோசடி ஹரீஷ் வாக்குமூலம்

முதலீட்டாளர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது.

BREAKING | ஆருத்ரா மோசடி : பாஜகவில் பொறுப்பு வாங்க கோடி கணக்கில் பணம்  கொடுத்த ஹரீஷ்! பாஜக புள்ளிகள் இருவருக்கு சம்மன்! - Seithipunal

இதனை தொடர்ந்து ஆருத்ரா இயக்குநர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடைபெற்றது. ஏற்கனவே இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பா.ஜ.க விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளராக இருந்த ஹரீஷை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், பா.ஜ.க விளையாட்டு பிரிவில் முக்கிய பொறுப்பை பெறுவதற்காக ஹரீஷ் நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. பொது மக்களிடம் ஏமாற்றிய பணத்தை கொடுத்து பா.ஜ.கவில் பொறுப்பு வாங்கியதாக ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர் ஹரீஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். ஹரீஷின் வாக்குமூலத்தை தொடர்ந்து பா.ஜ.க நிர்வாகி அலெக்ஸ் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட பா.ஜ.க நிர்வாகி சுதாகர் ஆகியோரை நேரில் விசாரணைக்கு ஆஜராக போலீசார் உத்தரவிட்டனர்.

பாஜகவில் பதவியைப் பெற பல கோடி ரூபாய் பணம் கொடுத்தேன் - ஆருத்ரா மோசடி  வழக்கில் கைதான ஹரீஸ் வாக்குமூலம்

இந்நிலையில் நேற்று அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரான அலெக்ஸ் 2 மணி நேரமாக விளக்கம் அளித்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக நிர்வாகி அலெக்ஸ், ஹரீஷை ஒரு முறை நேரிலும், 5 முறை தொலைப்பேசியிலும் பேசியுள்ளதாக காவல்துறையினர்யிடம் கூறியதாக தெரிவித்தார். ஹரீஷ் உடன் தனக்கு தொடர்பு இல்லாத நிலையில் தன்னை சம்பந்த படுத்திய காவல் துறை அறிக்கையை தவறு என அவர்களிடம் எடுத்துரைள்ளதாக கூறினார். தமிழகத்தில்
பாஜகவில் பணம் கொடுத்து பொறுப்பு வாங்கும் நிலை இல்லை என்றும் தன்னை இதில் வெளியில் யாரோ சிக்க வைத்திருப்பதாகவும் சந்தேகம் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்கள் அதிகமாக உள்ளனர் அவர்களின் பணத்தை மீட்டு தர வேண்டும் என கூறினார்

MUST READ