Homeசெய்திகள்சென்னைஅதிகாலை 3 மணியளவில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

அதிகாலை 3 மணியளவில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

-

சவிதா கல்லூரி நிர்வாகம் வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை.

அதிகாலை 3 மணியளவில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை சவிதா கல்லூரி வருமான வரிஏய்ப்பு புகார் அடிப்படையில் முறையாக கணக்கீடு செய்யாததால் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் ஒரு பகுதியாக சவிதா கல்லூரியில் கணக்காளராக பணிபுரியும் ஆவடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வீட்டில் ஆவடியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதன்பின் கார்த்திக் அவர்களின் தாயாரின் வீடான பட்டாபிராம் பகுதி கக்கன்ஜி நகர் மாடல் தெருவில் கார்த்திக் உடன் சென்று,வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் வீட்டை உடைத்து தற்போது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

அதிகாலை 3 மணியளவில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

மேலும் கார்த்திக்கின் சகோதரர் கணிகாசலமிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அவரது வீட்டில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ