Homeசெய்திகள்சென்னைதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

-

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

பெண் நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மதுபோதையில் நடனமாடிய இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு பெண் நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மதுபோதையில் நடனமாடிய இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சிட்லப்பாக்கம் பகுதியை சேர்ந்த 21 வயதான மணிபிரசாந்த், தாம்பரத்தில் உள்ள E-Con System Pvt Ltd என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் பணிபுரியும் திரிஷா என்பவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள சின்னசாமி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மணிபிரசாத், மது போதையில் நண்பர்களுடன் நடனமாடி கொண்டிருந்த போது, திடீரென மூச்சு விடமுடியாமல் தவித்த நிலையில், மயங்கி கீழே சாய்ந்தார். அவரை, மணிபிரசாத்தை நண்பர்களான சியாம், பரத் ஆகியோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர் பரிசோதித்து பார்த்ததில் மணிபிரசாத் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

இந்நிலையில் தகவல் அறிந்த நொளம்பூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து மணிபிரசாத்தின் உடலை, உடற்கூறு ஆய்வு செய்து, உரியவர்களிடம் ஒப்படைத்த நிலையில், உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ