Homeசெய்திகள்சென்னைமோசமான வானிலை - சென்னை திரும்பிய விமானம்

மோசமான வானிலை – சென்னை திரும்பிய விமானம்

-

அந்தமானில் சூறைக்காற்று மழையுடன் மோசமான வானிலை நிலவுவதால், சென்னையில் இருந்து 138 பயணிகளுடன் அந்தமான் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம், அங்கு தரையிறங்க முடியாமல், மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது.

 

மோசமான வானிலை - சென்னை திரும்பிய விமானம்விமானம் மீண்டும் நாளை காலை அந்தமான் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், 138 பயணிகள் சென்னையில் தவிப்பு. இதைப்போல் அந்தமானிலிருந்து சென்னைக்கு வருவதற்கு, அந்தமான் விமான நிலையத்தில் காத்திருந்த 164 பயணிகள் அந்தமானில் தவிப்பு.

 

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், இன்று காலை 5.30 மணிக்கு, 138 பயணிகளுடன், அந்தமானுக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானம் காலை 7.30 மணி அளவில், அந்தமான் வான் வெளியை நெருங்கியது. அப்போது அங்கு அதிகமான சூறைக்காற்றுடன், மோசமான வானிலை நிலவியது. இதை அடுத்து ஏர் இந்தியா விமானம், அந்தமானில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து கொண்டு இருந்தது.

 

ஆனாலும் அந்தமானில் வானிலை சீரடையாததால், விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டார். இதை அடுத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பிக் கொண்டு வரும்படி அறிவுறுத்தினர்.அதன்படி அந்த விமானம், இன்று காலை 11.15 மணியளவில், சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து தரையிறங்கியது.

 

இதை அடுத்து விமானம் இன்று ரத்து செய்யப்படுவதாகவும், நாளை காலை விமானம் மீண்டும் அந்தமான் புறப்பட்டு செல்லும். இந்தப் பயணிகள், இன்று வாங்கிய பயண டிக்கெட்டில், அந்தமான் பயணம் செய்யலாம் என்று அறிவித்தனர். ஆனால்  பயணிகள் சிலர், நாங்கள் வெளியூர்களிலிருந்து வந்திருக்கிறோம். எனவே எங்களுக்கு தங்குவதற்கு இட வசதி ஏற்பாடுகள் செய்து கொடுங்கள் என்று அதிகாரிகளிடம் கூறினர். ஆனால் அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர். இதனால் பயணிகள் சிறிது நேரம் அதிகாரிகளிடம் வாக்குவாதங்கள் செய்து விட்டு, கலைந்து சென்றனர்.

 

இதற்கு இடையே இந்த விமானத்தில், அந்தமானில் இருந்து சென்னை வருவதற்கு, 164 பயணிகள் அந்தமான் விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் விமானம், அந்தமானில் தரையிறங்காமல், சென்னைக்கு திரும்பி வந்து விட்டதால், அந்த 164 பயணிகள், அந்தமான் விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ