- Advertisement -
அம்பத்தூரில் அஜித்தின் பிரம்மாண்ட கட்டவுட்க்கு பீர் அபிஷேகம் செய்த ரசிகர்களால் பரபரப்பு!
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அம்பத்தூரில் உள்ள தனியார் திரையரங்கில் பல்வேறு பிரம்மாண்ட கட்டவுடுகள் வைக்கப்பட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரசிகர் ஒருவர் அஜித்தின் 50 அடி பிரம்மாண்ட கட்அவுட் மீது பீர் ஊற்றி அபிஷேகம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆபத்தான முறையில் செய்த ரசிகரின் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.