Homeசெய்திகள்சென்னைவிதிகளை மீறிய கட்டிடத்திற்கு சீல் - சென்னை மாநகராட்சி

விதிகளை மீறிய கட்டிடத்திற்கு சீல் – சென்னை மாநகராட்சி

-

சென்னையில் விதிகளை மீறிய 327 கட்டட உரிமையாளர்களுக்கு கட்டுமானத்தை நிறுத்தவும், 1124 இடங்களில் கட்டுமான பொருட்களை பறிமுதல் செய்தும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டிடங்கள் கட்டுவதற்கு முன், மாநகராட்சியிடம் வரைப்படம் சமர்ப்பித்து முன்அனுமதி பெற வேண்டும் என விதி உள்ளது.

இவ்வாறு அனுமதி பெற்றப் பின் விதிகளுக்கு மாறாக பணிகளை மேற்கொண்டால்  அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்படி, சென்னையில் 15 மண்டலங்களிலும் கடந்த ஜனவரி 1 முதல் 11 ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட பொறியாளர்களின் மூலம்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அனுமதிக்கு மாறாக விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள மற்றும் கட்டட அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமான இடங்களில் 327 உரிமையாளார்களுக்கு கட்டுமானப் பணிகளை நிறுத்தவும், 181 உரிமையாளர்களுக்கு கட்டுமான இடம் பூட்டி சீல் வைக்கப்படும் என குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.

கட்டுமான இடத்தை பூட்டி சீல் வைக்க குறிப்பாணை வழங்கி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விதிமீறல்களை திருத்திக் கொள்ளாத 10 கட்டுமான இடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.

கட்டட அனுமதிக்கு மாறாக விதிமீறி கட்டப்பட்ட கட்டுமான இடங்களில் கட்டுமானப் பணியை நிறுத்த குறிப்பாணை வழங்கிய பிறகும் கட்டட அனுமதியின்படி திருத்தம் மேற்கொள்ளாத 1124 கட்டுமான இடங்களில் கட்டுமானப் பொருட்கள் மாநகராட்சி அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

எனவே , நடவடிக்கைகளை தவிர்க்க விதிகளை பின்பற்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

MUST READ