Homeசெய்திகள்சென்னைபுயல் கரையைக் கடக்கும்போது பஸ் இயக்கம் நிறுத்தம்! - போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

புயல் கரையைக் கடக்கும்போது பஸ் இயக்கம் நிறுத்தம்! – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

-

புயல் கரையைக் கடக்கும்போது பஸ் இயக்கம் நிறுத்தம்! - போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலையில் மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என அறிவிப்பு !

சென்னை மற்றும் புதுச்சேரிக்கு கிழக்கே 180 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இப்புயல் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (30.11.2024) இரவு 7 மணிக்கு சென்னை மற்றும் புதுச்சேரி இடையே மரக்காணம்/மகாபலிபுரத்தை மையமாக வைத்து கரையை கடக்க துவங்கும்.

அதனால் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு , விழுப்புரம் ,புதுச்சேரி, கடலூர் மாவட்டங்களில் பரவலாக மிககனமழை முதல் அதிதகனமழையும், குறுகிய நேரத்தில் தீவிர மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

தரைக்காற்றின் வேகமும், மழைப்பொழிவும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் படிப்படியாக அதிகரிக்கும். இன்று காலை 10 மணி முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும்.

சென்னை முதல் புதுச்சேரி வரையிலான பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் தமிழ்நாடு அரசு தரப்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக,  இன்று (நவ.30) புயல் கரையை கடக்கும் போது சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலையில் மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில், ”இன்று (நவ., 30) அதிகாலை முதல் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பஸ்கள் வழக்கம்போல் இயங்கும். பெஞ்சல் புயல் இன்று  பிற்பகல் கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் மாநகர் போக்குவரத்துக் கழக பஸ்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் ” என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கனமழை: விமான சேவைகள் ரத்து; வானில் வட்டமடிக்கும் விமானம்!

MUST READ