Homeசெய்திகள்சென்னைவங்கதேசம் குறித்து அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்கு

வங்கதேசம் குறித்து அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்கு

-

- Advertisement -

வங்கதேசம் குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக நிர்வாகி மீது சைபர் கிரைம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.

வங்கதேசம் குறித்து அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்குவிசாரணைக்கு ஆஜரான பாஜக நிர்வாகிக்கு ஆதரவாக பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தி காவல் ஆணையர் அலுவலகம் வருகை.

“வங்காளதேசத்தில் தண்ணீரில் குதித்த இந்துக்களை பயங்கரவாதிகள் அடித்தே கொன்றனர். சிறுபான்மையாக இருக்கும் இந்துக்களின் நிலைமை இதுதான்” என சமூக வலைதளங்களில் பா.ஜ.க ஆன்மீக பிரிவு மாநில செயலாளரும் வழக்கறிஞருமான அசோக் குமார் என்பவர் சில தினங்களுக்கு முன் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார்.

அவதூறு பரப்பியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அசோக்  மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் அசோக் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அளித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இன்று வரச் செய்தனர்.

திமுக எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் மீதான வழக்கு ரத்து!

இதன் அடிப்படையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரான அசோக்கிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அசோக்குக்கு ஆதரவாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் காவல் ஆணையர் அலுவலகம் வந்துள்ளார்.

MUST READ