சென்னை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில் சேவை திங்கள் முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே, வரும் திங்கள் (டிச.9) முதல் ரெயில் சேவையில் மாற்றம் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
125 மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி சென்னை கடற்கரை- தாம்பரம் -செங்கல்பட்டு பிரிவில் புறநகர் ரெயில் சேவைகளில் பின்வரும் மாற்றங்கள் நாளை (டிச.08) முதல் நடைமுறைக்கு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே பயணிகள் அதற்கேற்ப தங்களின் பயணத்தை திட்டமிடவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஜெய்ப்பூருக்கு சென்ற ‘கூலி’ படக்குழு…. படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அமீர்கான்!