ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐயின் புலன் விசாரணயில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத்தால் சிபிஐயிடமிருந்து மாற்றி தமிழக காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்..
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிபிசிஐடி டிஜிபி கண்காணிப்பில் தூத்துக்குடி எஸ்.பியாக இருந்த ஜெயக்குமார் உள்ளடக்கிய, சிறப்பு புலனாய்வுக் குழுவை ( எஸ்.ஐ.டி.) நியமித்து உத்தரவிட்டது.
இந்த எஸ்.ஐ.டி சார்பில், தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறது. இந்த வழக்கு இன்று நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்த்து. அப்போது தமிழக காவல் துறையின் சார்பில் ஆஜரான மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா ஆஜராகி “ இந்த வழக்கில் பல்வேறு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு கொலைக்கான உள்நோக்கங்களும் ஆராயப்பட்டு புலன் விசாரணை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்..
தூத்துக்குடி எஸ்.பியாக இருந்த ஜெயக்குமார் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக மாற்றப்பட்டாலும் தொடர்ந்து தொய்வின்றி புலன் விசாரணை சென்றதாகவும் தற்போது அவர் கடலூர் மாவட்ட எஸ்.பியாக பணிமாற்றம் செய்திருப்பதால் புலன் விசாரணை பாதித்துள்ளதாகவும், அவருக்கு பதிலாக திருச்சி அல்லது திருச்சி அருகிலுள்ளவர்களை புலன் விசாரணை அதிகாரிகளாக நியமித்தால் வழக்கின் புலன் விசாரணைக்கு எளிதாக இருக்கும் என கூறினார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுந்தர் மோகன் கடலூருக்கு பணியிடைமாற்றம் செய்யப்பட்ட ஜெயக்குமார் எஸ்.பி.க்கு மாற்றாக திருச்சி டிஐஜி, தஞ்சாவூர் எஸ்.பி ஆகியோரை கூடுதலாக நியமித்து ஏற்கெனவே இருக்கக்கூடிய எஸ்.ஐ.டி அதிகாரிகளோடு புலன் விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
10% போக்சோ வழக்குகளில் கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை – ராமதாஸ் சாடல்