- Advertisement -
சென்னை கடற்கரை – சேப்பாக்கம் ரயில் சேவை ரத்து
சென்னை கடற்கரை- சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை ஜூலை 1 முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை 7 மாதங்களுக்கு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4-வது புதிய ரயில் பாதை அமைக்க உள்ளதால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிர்வாகக் காரணங்களால் 1.07.2023 முதல் 31.01.2024 வரை சென்னை கடற்கரையில் இருந்து சேப்பாக்கம் செல்லும் MRTS ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சிரமத்துக்கு மிகவும் வருந்துகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.