மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து குரோம்பேட்டை வழியாக பூந்தமல்லி வரை செல்லும் புதிய வழித்தடத்திற்கான, (DFR) சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்கியது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்.
இந்த புதிய வழித்தடதிற்காக குன்றத்தூர் மற்றும் திருநீர்மலை ஆகிய இரண்டு இடங்கள் வழியாக செல்ல ஆய்வுகள் நடைபெறுகிறது.
மறுபடியும் ரூ.20 உயர்ந்தது தங்கம் விலை… ஷாக்கான வடிக்கையாளர்கள் !
மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் குரோம்பேட்டை வழியாக பூந்தமல்லி வரை கண்டறியப்பட்டுள்ள இந்த புதிய வழித்தடம் தோராயமாக 15 கிலோ மீட்டரை உள்ளடக்கியது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தயாரிக்கும் பணியை, ஏற்கனவே பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரையிலான மெட்ரோ வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள Aarvee Associates, Architects, Engineers & Consultants Pvt நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பூந்தமல்லி முதல் பரந்தூர் புதிய விமான நிலையம் வரை 43.63 கி.மீ நீளத்திற்கு 19 உயர்மட்ட மெட்ரோ நிலையத்துடன்அமைக்க DPR விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் மெட்ரோ ரயில் நிறுவனம் ஈடுபட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்தமாக மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பூந்தமல்லி வழியாக பரந்தூர் வரை மொத்தம் 60 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய வழித்தடத்தை அமைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.