Homeசெய்திகள்சென்னைகூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய சென்னை காவல் ஆணையரின் சிறப்பு அதிவிரைவு படை

கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய சென்னை காவல் ஆணையரின் சிறப்பு அதிவிரைவு படை

-

- Advertisement -

கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண் பொக்கலைன் எந்திரம் மூலம் காப்பாற்றிய சென்னை காவல் ஆணையரின் சிறப்பு அதிவிரைவு  படை போலீசார்.

கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய சென்னை காவல் ஆணையரின் சிறப்பு அதிவிரைவு படைசென்னை விருகம்பாக்கத்தில் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் குடியிருக்கும் டாய்சா எனும்  அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு சென்னை காவல் ஆணையர் அருணின் SAG எனும் சிறப்பு அதிவிரைவு படை இருந்துள்ளனர்.

அப்போது 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அருகில் இருந்த கூவம் ஆற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடுவதாக அவ்வழியாக வந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக காவல் ஆணையரின் சிறப்பு அதி விரைவு படையின் உதவி ஆய்வாளர் சண்முகம், முதல் நிலைக் காவலர் வினோத் உட்பட காவலர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய சென்னை காவல் ஆணையரின் சிறப்பு அதிவிரைவு படைஅருகில் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் பொக்லைன் வாகனம் ஒன்றை உதவிக்கு அழைத்து, முன் பகுதியில் நின்று கொண்டு கூவத்தில் தத்தளித்த பெண்ணை மீட்டு கரைச் சேர்த்துள்ளனர்.

MUST READ