Homeசெய்திகள்சென்னைவிதிகளை மீறி செயல்பட்ட 2 தனியார் மதுபான விடுதிகள் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு

விதிகளை மீறி செயல்பட்ட 2 தனியார் மதுபான விடுதிகள் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு

-

- Advertisement -

விதிகளை மீறி செயல்பட்ட 2 தனியார் மதுபான விடுதிகள் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவுசென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் Lord of the drinks Bar என்ற தனியார் மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான விடுதி அரசு அனுமதித்த நேரத்தை மீறி செயல்பட்டதாகவும், அதிக சத்தத்துடன் ஸீபிக்கரில் பாடல் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்ததாகவும் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் செல்வநாகரத்தினம் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்வரன் மற்றும் தனிப்படை போலீசார் அந்த தனியார் மதுபான விடுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது மதுபான பாரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆடல் பாடல் நடந்ததும், அரசு அனுமதித்த நேரத்தை மீறி செயல்பட்டு வந்ததும் தெரிந்தது.

மேலும் காவல்துறையினர் மதுபான விடுதியின் ஊழியரிடம் ஏன் இதுபோல செயல்படுகிறீர்கள்? என்ற கேள்வியை எழுப்பினர். “12 மணி வரை தான் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது, 12.20 மணி வரை செயல்பட்டு கொண்டிருக்கிறது ஏன்?  ஏன் மூடவில்லை” என காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதற்கு மதுபான விடுதி மேலாளர் மழுப்பலான பதிலை சொல்லியே சமாளித்தார். இதனை போலீசார் வீடியோ பதிவு செய்தனர்.

இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்வரன் விசாரணை அறிக்கையை காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபுவிடம் தாக்கல் செய்தார். இதன் பிறகு நுங்கம்பாக்கம் போலீசார் Lord of the Drinks bar. உரிமையாளர் ராஜ் பிரதீப், பார் மேலாளர் வெங்கட்குமார், பார் உதவி மேலாளர் ஸ்ரீதர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதே போன்று, சென்னை புதுப்பேட்டை எல்ஜி கார்டன் சாலையில்  BTL LIVE MUSIC BAR என்ற தனியார் மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான விடுதி அரசு அனுமதித்த நேரத்தை மீறி செயல்பட்டதாகவும், அதிக சத்தத்துடன் ஸீபிக்கரில் பாடல் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்ததாகவும் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் செல்வநாகரத்னம் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து எழும்பூர் காவல் உதவி ஆய்வாளர் நரசிம்மன் மற்றும் துணை ஆணையரின் தனிப்படை  போலீசார் அந்த தனியார் மதுபான விடுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது மதுபான பாரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆடல் பாடல் நடந்ததும், அரசு அனுமதித்த நேரத்தை மீறி செயல்பட்டு வந்ததும் தெரிந்தது.

மேலும் காவல்துறையினர் மதுபான விடுதியின் மேலாளர், ஊழியர்களை அழைத்து கண்டித்தனர்.    இதையடுத்து எழும்பூர்  காவல் உதவி ஆய்வாளர் நரசிம்மன்  எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மதுபான விடுதி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ