சென்னை துறைமுக பொறுப்பு கழக வளாகத்தில் ரூ 85 லட்சம் செலவில் பெண்கள் உடற்பயிற்சி கூடம், நீர் தேக்க தொட்டி பணிகள் தொடக்கம்
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் துறைமுக பொறுப்புக் கழக வளாகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில். ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் நீர் தேக்க தொட்டியும் 25 லட்சம் மதிப்பீட்டில் பெண்கள் உடற்பயிற்சி கூடமும் கட்டுவதற்காக பணிகள் இன்று தொடங்கப்பட்டன.
புது வண்ணாரப்பேட்டை 39 வது வார்டு உட்பட்ட AE கோயில் தெரு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் 39 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தேவி கதிரேசன் உள்ளிட்டோர் பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கி வைத்தனர்
AE கோயில் தெருவில் துறைமுக பொறுப்புக் கழக குடியிருப்புக்கு செல்வதற்காக புதிய வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு சாலைகள் அமைக்கப்பட துறைமுகம் சார்பில் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.
ஆனால் சுற்று வட்டார மழை நீர் வெளியேற்றும் மாநகராட்சியின் நீர் தேக்க தொட்டி தடையாக இருந்ததால் அவற்றை அகற்றுவதற்கு துறைமுகம் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தன.
மழைநீர் வெளியேறும் நீர்த்தேக்க தொட்டியை துறைமுக வளாகத்தினுள் அமைப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் நிலம் கோரப்பட்டு வழங்கப்பட்ட நிலையில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டன.