கடந்த 14 ஆம் தேதி குன்றத்தூரை சேர்ந்த கிரிதரன் அவரது வீட்டில் எலித் தொல்லை காரணமாக பெஸ்ட் கன்ட்றோல் மூலம் வீட்டில் எலி மருத்து வைத்துள்ளார். எலி மருந்து நெடியில் சிக்கி கிரிதரன் அவரது மனைவி பவித்திரா மற்றும் மகள் வைஷ்ணவி /6, சாய் சுதர்சன்/1 ஆகியோர் வாந்தி,பேதி,மூச்சு திணறல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற போதிலும் இரு குழந்தைகள் உயிர் இழந்தனர்.
பெற்றோர் இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில் நேற்று குழந்தைகள் இறந்த விவரத்தை கூறி அவரிடம் உடல் கூறாய்விற்கு புகார் பெற்றது குன்றத்தூர் காவல்துறை. இந்த நிலையில் இரு குழந்தைகளின் உடல் கடந்த 4 நாட்களாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உடல் கூறாய்வு செய்ய முடிவு செய்து உடல்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டன. முன்னதாக இந்த வழக்கில் தனியார் pest control நிறுவனத்தை சேர்ந்த சங்கர் தாஸ்,தினகரன் ஆகியோரை கைது செய்த காவல்துறை உரிமையாளர் பிரேம் குமாரை தேடி வருகிறது.