Homeசெய்திகள்சென்னைதூய்மை பணியாளர்களின் பிள்ளைகளுக்கு இந்த ஆட்சியில் எதிர்காலம் உள்ளது - அமைச்சர் கே.என்.நேரு 

தூய்மை பணியாளர்களின் பிள்ளைகளுக்கு இந்த ஆட்சியில் எதிர்காலம் உள்ளது – அமைச்சர் கே.என்.நேரு 

-


தூய்மை பணியாளர்களின் பிள்ளைகளுக்கு இந்த ஆட்சியில் எதிர்காலம் உள்ளது  என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி நடத்தப்படும் நிகழ்வுகளில் ஒன்றாக சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பெரம்பூர் மங்களாபுரம் பகுதியில் மனித நேய உதய நாள் – பெண்ணின்றி ஏது உலகம் முன்னின்று காக்கும் உதயம் என்ற பெயரில் பெண் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மற்றும் 500 தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, உள்ளிட்டோர் பங்கேற்று மருத்துவ முகாமை தொடங்கி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

தொடர்ந்து விழா மேடையில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, மாநகராட்சிக்கு 450- கும் மேற்பட்ட தற்காலிக மருத்துவர்கள் இன்று நியமிக்க உள்ளோம். விரைவில் 121 நிரந்தர மருத்துவர்களும் நியமிக்க இருக்கிறோம் என்றும் வட சென்னை நெருக்கமான பகுதி அங்கு கழிவு நீர் குடிநீர் குழாய்கள் போடப்பட்டு நீண்ட ஆண்டுகள் ஆன காரணத்தால் தற்போது அவற்றை சரி செய்யும் பணியை மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் சேகர் பாபு செய்து வருகிறார் என்று தெரிவித்தார்.

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளாக மாநகராட்சி பணிகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. யார் என்ன செய்தாலும் இந்த பகுதியில் மீண்டும் திமுக தான் வரும், இங்கு மட்டுமல்ல டெல்டா பகுதிகள் என அனைத்திலும் திமுக தான் வெற்றி பெரும், தளபதி தான் மீண்டும் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர், பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். தூய்மை பணியாளர்களின் பிள்ளைகளுக்கு இந்த ஆட்சியில் எதிர்காலம் உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

தொடர்ந்து பெண் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, நலத்திட்ட உதவிகளுடன், பழங்கள், சத்துமாவு போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது. எக்கோ கார்டியோகிராம், எக்ஸ்ரே, மெமோகிராம், இருதய பரிசோதனை, மகப்பேறு குழந்தை மருத்துவம், முழு ரத்த பரிசோதனை உள்ளிட்ட இலவச மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுதவிர தூய்மை பணியாளர்களுக்கும் சேர்த்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பகுதி செயலாளர்கள் துணை செயலாளர்கள் என திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இன்று வெளியாகும் ‘வீர தீர சூரன்’ பட டீசர்!

MUST READ