ஃபெஞ்சல் புயல் நாளை கரையை கடக்கும் நிலையில் சென்னையில் நாளை வழக்கம்போல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- ஃபெஞ்சல் புயலின் தாக்கம் நாளை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐ.டி. ஊழியர்களும் அவர்கள் தங்கள் இல்லத்திலிருந்து பணிகளைத் தொடரவும் தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிற்குள் இயங்கக்கூடிய பூங்காக்கள் அனைத்தும் மூடப்படுவதாகவும் சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புயலின் தாக்கம் காரணமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயலின் தாக்கம் பொருத்தும் மழையின் அளவு பொருத்தும் பேருந்துகளின் வழித்தட மாற்றம் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.