ராமநாதபுரம் மாவட்டம், பேராவூரில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “நாடாளுமன்றத் தேர்தலில் 40 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பது வாக்குச்சாவடி முகவர்கள்தான். பின் தங்கிய மாவட்டமான ராமநாதபுரத்தை முன் மாதிரி மாவட்டமாக்கியது தி.மு.க. அரசு. பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த ராமநாதசுவாமி கோயில் தேரை ஓட வைத்தது தி.மு.க. அரசு.
அதிமுக மாநில மாநாட்டைக் கண்டு திமுக அச்சமடைந்துள்ளது- எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தை தி.மு.க.தான் நிரந்தரமாக ஆளும் என்ற கலைஞரின் கனவை நிறைவேற்றிக் காட்டுவோம். மத்தியில் பல ஆட்சி மாற்றங்களுக்கு வித்திட்ட முக்கிய கட்சி தி.மு.க. அனைவருக்கும் பொதுவான மக்களாட்சியை நடத்துவதால் நம்மை நிராகரிப்பவர்களே இருக்க மாட்டார்கள். மக்களுக்கு நமது ஆட்சி மீது நம்பிக்கை உள்ளது; பயனுள்ளத் திட்டங்களைச் செய்துக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்திச் செய்யும் ஆட்சியாக தி.மு.க. அரசு உள்ளது.
90வது பிறந்த நாள் – முரசொலி மாறன் சிலைக்கு தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
ஆட்சிக்கு வருவதற்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை பா.ஜ.க. நிறைவேற்றவில்லை. யாராலும் நிராகரிக்க முடியாத நல்லாட்சியாக தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டுக்கு தந்த வாக்குறுதிகளைக் கூட பா.ஜ.க. அரசு நிறைவேற்றவில்லை. 2014- ல் ராமநாதபுரத்தில் பேசும் போது சொல்லிய வாக்குறுதிகளை பிரதமர் நிறைவேற்றவில்லை. ரூபாய் 15 லட்சம் போடவில்லை; 2 கோடி பேருக்கு வேலைக் கொடுக்கும் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இந்தியாவின் கட்டமைப்பையே பா.ஜ.க. சீரழித்து விட்டது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.