Homeசெய்திகள்சென்னைஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை நிரூபிக்கும் கல்லூரி மாணவிகள்!

ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை நிரூபிக்கும் கல்லூரி மாணவிகள்!

-

தமிழர் திருநாளான தைத்திருநாள் பொங்கலை முன்னிட்டு கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கும் நிலையில், முன்னதாகவே பொங்கல் கொண்டாட்டத்தை கொண்டாடிய தனியார் கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவிகள்.

ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை நிரூபிக்கும் கல்லூரி மாணவிகள்!

அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் பக்தவத்சலம் பெண்கள் தனியார் கல்லூரியில் மாணவிகள் இணைந்து பொங்கல் வைத்து, சிலம்பம் சுற்றுதல், உரி அடித்தல்,  கோலப் போட்டி, கயிர் இழுத்தல், பரமபதம், பல்வேறு பாரம்பரிய விளையாட்டு மற்றும் சிறப்பு நடன நிகழ்ச்சி கல்லூரி மாணவிகளின் சிறப்பான நடனத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை நிரூபிக்கும் கல்லூரி மாணவிகள்!

ஆண்களுக்கு பெண்கள் நிகரானவர்கள் என்பதை போல் கல்லூரி மாணவிகளின் சிலம்பம் சுற்றுதல், குழுநடனம் காண்பதற்கு மிகவும் வியப்பாக அமைந்தது. இவ்விழாவில் பள்ளி பருவ உணவுகளான குச்சி மிட்டாய், குருவி ரொட்டி, பஞ்சுமிட்டாய், இளநீர் பானம், பனங்கற்கண்டு பானம், மோர், போன்ற பொருட்கள் மாணவிகளுக்காக வைக்கப்பட்டிருந்தன.

ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை நிரூபிக்கும் கல்லூரி மாணவிகள்!

மேலும் இந்நிகழ்ச்சியில் 2000-த்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ