Homeசெய்திகள்சென்னைபெரம்பூரில் ரயில் மோதி கல்லூரி மாணவி பலி: கவனக்குறைவால் நிகழ்ந்த விபரீதம்

பெரம்பூரில் ரயில் மோதி கல்லூரி மாணவி பலி: கவனக்குறைவால் நிகழ்ந்த விபரீதம்

-

பெரம்பூர் லோகோ -கேரேஜ் ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விரைவு ரயில் மோதி கல்லூரி மாணவி பலி ஆனார்.

சென்னை அம்பத்தூர் கல்லிக்குப்பம் ஆஞ்சநேயர் தெருவை சேர்ந்தவர் ரோசிரி நர்சிசன் துரை. இவரது மகள் கேத்தரின் ஷீபா(22) சென்னை வேப்பேரியில் உள்ள செயின்ட் கிருஸ்டோபர் கல்லூரியில்  இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.‌ மேலும் மாணவி கேத்திரன் ஷீபா தினமும் அம்பத்தூரில் இருந்து ரயிலில் பெரம்பூர் வந்து பின்னர் அங்கிருந்து ஆட்டோ அல்லது பேருந்து மூலம் கல்லூரிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.‌

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் ரயிலில் கல்லூரிக்கு வந்த மாணவி கேத்திரின் ஷீபா பெரம்பூர் லோகோ-கேரேஜ் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது திருவனந்தபுரத்தில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்த விரைவு ரயில் மோதி சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை பார்த்த சக பயணிகள் உடனே ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் பெரம்பூர் ரயில்வே போலீஸார் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பூட்டிய வீட்டின் கதவை உடைத்து திருட்டு – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

MUST READ