ட்ரேடிங்கில் பணத்தை இழந்த மாணவி தற்கொலை
ட்ரேடிங்கில் பணத்தை இழந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
100 கோடி கொண்ட இந்திய மக்கள் தொகையில் 2 முதல் 3 விழுக்காட்டினர் மட்டுமே பங்குசந்தை முதலீட்டில் வர்த்தகம் செய்துவருகின்றனர். ஏராளமானோர் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து பெரும் வருவாயை ஈட்டிவருகின்றனர். பொதுவாக, காலம்காலமாக பங்குச் சந்தைகள் பாதாள கிணறு என்றும், அதில் விழுந்தால் எழ வாய்ப்பே இல்லை என்பது போன்ற தகவல்கள் மக்களிடையே அதிகம் பரப்பப்பட்டுள்ளன. இதனால், பெரும்பான்மையான மக்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை தவிர்த்து வருகின்றனர். இருப்பினும் அதில் முதலீடு செய்வது ஆபத்து என்றே கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை ஏழுகிணறு பகுதொயில் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி ஆன்லைன் ரேடிங்கில் ரூ.30 ஆயிரம் பணத்தை இழந்த கல்லூரி மாணவி மகாலெட்சுமி தற்கொலை செய்துகொண்டார். தாய் செய்வதுவந்த மார்க்கெட்டிங் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வருமானத்தை அதிகரிக்க ட்ரேடிங்கில் முதலீடு செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.