Homeசெய்திகள்சென்னைநோயாளிகளுடன் வரும் அட்டெண்டர்க்கு புதிய கட்டுபாடு - ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.தேரணி ராஜன்

நோயாளிகளுடன் வரும் அட்டெண்டர்க்கு புதிய கட்டுபாடு – ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.தேரணி ராஜன்

-

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு அரசு சிறப்பு மருத்துவமனையில் நேற்று மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தி தாக்கப்பட்ட நிலையில் மருத்துவர்களுக்கான பணி பாதுகாப்பு வேண்டும் நோயாளிகளுக்கு உடன் வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவர்கள் இன்று போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

 நோயாளிகளுடன் வரும் அட்டெண்டர்க்கு கட்டுபாடு - ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் டாக்டர். தேரணி ராஜன்

இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை முதல்வர் டாக்டர்.தேரணி ராஜனிடம் பேசிய போது  மருத்துவமனையில்  செயல்படுத்தப்பட்ட புதிய கட்டுபாடுகள் குறித்து விளக்கி உள்ளார். அதில் தமிழகத்தில் முதல்முறையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் உடன் வருபவர்களுக்கு டேக் சிஸ்டம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. உள்நோயாளியாக ஒருவர் சேர்க்கப்படும் போதே அவருடன் வரும் அட்டெண்ட்க்கும் சிகப்பு நிறத்திலான ஒரு டேக் கொடுக்கப்படுகிறது பெயர்,வயது மற்றும் அவர்களுடைய வார்ட் குறிப்பிடப்பட்டு அது கையில் கட்டிக்கொண்டு சென்றால்தான் மருத்துவமனையில் உள்ளேயும் வெளியேயும் செல்ல அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது.

ஏற்கனவே பயிற்சி முறையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அது தொடங்கப்பட்ட நிலையில் இன்று அனைத்து நோயாளிகளுக்கும் அது கட்டாயமாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

குறைந்த அளவிலான மருத்துவர்களைக் கொண்டும் பி ஜி மருத்துவர் கொண்டும் கூடுதல் செவிலியர்களை பணியில் அமர்த்தியும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு செயல்பட தொடங்கியது.

காலை 7 மணிக்கு தொடங்கும் புற நோயாளிகள் பிரிவு நோயாளிகள் காத்திருப்பு இல்லாமல் சிகிச்சை பெற்று செல்கின்றனர் என அவர் தெரிவித்தள்ளார்.

பகவத் கீதையில் கை வைத்து பதவியேற்பு: அமெரிக்காவில் உளவுத்துறை இயக்குநராக ‘இந்து பெண்’

MUST READ