துபாயில் இருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவை சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை செய்ததில் தோற்று உறுதி என தகவல் வெளியாகியிருக்கிறது.
துபாயில் இருந்து விமான மூலம் சென்னை வந்த இரண்டு விமான பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பயணிகள் இன்று அதிகாலை துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பொது சுகாதார இயக்குனரகம் மூலமாக பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு அந்த பயணிகள் முழுவதுமாக கண்காணிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அந்த இரண்டு பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாக இருக்கக் கூடிய நிலையில் அந்த நபர்கள் இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த நபர்களுக்கு தொற்று உறுதியான நிலையில் அது எந்த வகையான உருமாறிய கொரோனா என கண்டறிவதற்காக அவர்களுடைய மாதிரிகளை சென்னை தேனாம்பேட்டையில் அமைந்திருக்கக் கூடிய மாநில பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பகுதி என்பதால் உடனடியாக பொது சுகாதாரத்துறை இயக்குனராக மூலமாக அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய துணை இயக்குனர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தனிமை படுத்துவதற்கு தேவையான வழிமுறைகளையும் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இருவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சென்னையில் இருந்து அவர்கள் எந்த வாகனம் மூலம் புதுக்கோட்டை சென்றார்கள் என்ற விபரத்தையும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது .
இந்த நிலையில் சென்னை, கோவை உள்ளிட்ட நான்கு பன்னாட்டு விமான நிலையங்களில் பன்னாட்டு விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தொற்று கண்டறியப்படும் நிலையில் அது முழுமையாக எந்த வகையான உருமாறிய கொரோனா என கண்டறியப்படுவது மட்டுமல்லாமல் தற்போது வெளிநாடுகளில் பரவி வரக்கூடிய BF7 என்ற வகையான உருமாறிய கொரோனாவாக இருக்கும் பட்சத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தமிழ்நாடு முழுவதுமாக தடுப்பு நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கும் நிலையில் இன்று அதிகாலை சென்னை வந்த இரண்டு விமான பயணிகளுக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில் இருவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.