எம் முத்துராஜா என்பவர் ஆன்லைன் ஆர்டரில், ஆர்.ஆர்.பிரியாணியுடன் கெட்டுபோன பீடா வந்ததாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்தாா். பின்னர் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் பில் கட்டணம் 247 ரூபாயை திருப்பிதர வேண்டும் என வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நுகர்வோருக்கு, பில் தொகையை திருப்பிதர வேண்டும், இழப்பீடு 5 ஆயிரம், வழக்கு செலவு தொகை 5 ஆயிரம் என பத்தாயிரம் ரூபாயை ஆர்.ஆர்.பிரியாணி, சுவிக்கி இணைந்து வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.முத்துராஜா என்பவர், சென்னை தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் சென்னை தி நகரில் உள்ள ஆர்.ஆர்.பிரியாணி ஹோட்டலில், நண்பர்களுக்கு விருந்து வைப்பதற்காக பிரியாணி மற்றும் பீடாவை சுவிக்கி ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்ததாகவும், பார்சல் வந்து திறந்து பார்க்கும் போது பீடா கெட்டுப் போனதும் காலவதியானது என தெரியவந்ததாகவும், அதில் உள்ள புழுக்கள் பிரியாணியிலும் பரவியதாகவும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்ததில் காலாவதியான பீடாக்களை பறிமுதல் செய்ப்பட்டதாக தெரிவித்துள்ளார்
எனவே பில் கட்டணம் 247 ரூபாயை திருப்பிதர வேண்டும்,இழப்பீடாக ஆர்.ஆர்.பிரியாணி கடை மற்றும் ஸ்விக்கி இணைந்து ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணைய தலைவர் ஜிஜா தலைமையிலான அமர்வு,
ஆர் ஆர் பிரியாணி மற்றும் சுவிக்கி தரப்பில் யாரும் ஆஜராகவில்லை என்றும் எனவே இந்த வழக்கில் தகுதியின் அடிப்படையில் தீர்மானிப்பதாக கூறி, மனுதாரருக்கு ஆர்ஆர் பிரியாணி மற்றும் சுவிக்கி இணைந்து பில் தொகை 247 ரூபாய் ,அதுபோல வழக்கு செலவு தொகை 5000 ரூபாய் இழப்பீடாக 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
32% நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் – வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்