Homeசெய்திகள்சென்னைகாசிமேட்டில் அலைமோதும் மீன் பிரியர்கள் கூட்டம்

காசிமேட்டில் அலைமோதும் மீன் பிரியர்கள் கூட்டம்

-

- Advertisement -
kadalkanni

விடுமுறை தினமான இன்று காசிமேட்டில் அலை மோதியது மீன் பிரியர்களின் கூட்டம். கடந்த வாரம் ஏற்றம் இறக்கமாக இருந்த மீன் விற்பனை இந்த வாரம் களைகட்டியது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று காசிமேட்டில் மீன் விற்பனை களை கட்டியுள்ளது. அதிகாலை முதலே ஏராளமான கூட்டம் காசிமேட்டில் குவிந்ததால் காசிமேடு திருவிழா போல காட்சி அளிக்கிறது.

காசி மேட்டில் அலைமோதும் மீன் பிரியர்கள் கூட்டம்

விற்பனையாளர்கள் சில்லறை விற்பனையாளர்கள் மீன் விற்பனை செய்யும் பெண்கள் ஏற்றுமதியாளர்கள் என ஏராளமானோர் அதிகாலை முதலே ஏலம் எடுக்க குவிந்தனர் அதிகாலை முதலே காசிமேடு பரபரப்பானது.

கடந்த வாரங்களில் முழு வஞ்சிரம் மீன் 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றும் அதே விலையை தொடர்கிறது. துண்டுகளாக கழிவுகள் நீக்கி வெட்டப்பட்ட மீன் 1100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மீன் இன்று 1150 ரூபாய் விற்பனை செய்யப்படுகின்றன.

காசி மேட்டில் அலைமோதும் மீன் பிரியர்கள் கூட்டம்

அதேபோல், வெள்ளை வவ்வால் 1100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 1200 ரூபாய்க்கும் கருப்பு வவ்வால் 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், சங்கரா கடந்த வாரம் 450 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றும் அதே விலை தொடர்கிறது. கடல் விரால் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 520 ரூபாய் விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த வாரம் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சுறா இந்த வாரம் 600 விற்பனை செய்யப்படுகின்றன. இறால் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

காசி மேட்டில் அலைமோதும் மீன் பிரியர்கள் கூட்டம்

களவான் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வாரம் நண்டு 350 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், கொடுவா 500 விற்பனை செய்யப்பட்டவை 450 ரூபாயும், பாறை 500க்கு விற்பனை செய்யப்பட்டவை 450 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும், அயிரா 350 ரூபாய்க்கும், ஷீலா 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

காசி மேட்டில் அலைமோதும் மீன் பிரியர்கள் கூட்டம்

காணங்கத்தை, கேரை உள்ளிட்ட மீன்கள் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

காசிமேட்டில் மீன் பிரியர்கள் குவிந்ததால் காசிமேடு மீண்டும் களைகட்டியது.

MUST READ