Homeசெய்திகள்சென்னைதிருப்பதியில் தரிசன ஏற்பாடு செய்வதாக பக்தர்களிடம் சைபர் கிரைம் மோசடி  

திருப்பதியில் தரிசன ஏற்பாடு செய்வதாக பக்தர்களிடம் சைபர் கிரைம் மோசடி  

-

- Advertisement -

 சென்னையின் பிரபல மருத்துவமனை துணைத் தலைவராக இருக்கும் மருத்துவரிடம் சமூக வலைதளம் மூலமாக திருப்பதி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகி என கூறி மருத்துவரிடம் 40 ஆயிரம் ரூபாய் நூதன மோசடி.புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

திருப்பதியில் தரிசன ஏற்பாடு செய்வதாக பக்தர்களிடம் சைபர் கிரைம் மோசடி  

சமூக வலைதளங்கள் மூலமாக ஆன்லைன் டிரேடிங் விளம்பரங்கள், வீட்டிலிருந்தே ஆன்லைனில் சம்பாதிப்பது போன்ற விளம்பரங்கள் மூலம் மக்களிடம் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதே போன்று மக்களுக்கு தேவையான சேவைகளை செய்து தருவதாக கூறியும் சைபர் கிரைம் மோசடி கும்பல்கள் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். அந்த வகையில் திருப்பதியில் தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி நூதன முறையில் சமூக வலைதளத்தில் மோசடி நடைபெறுவதாக சென்னை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல மருத்துவமனையின் துணைத் தலைவராக செயல்பட்டு வரும் பெண் மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . பெண் மருத்துவர் பேஸ்புக் விளம்பரங்களை பார்த்துக் கொண்டு வந்தபோது திருமலா திருப்பதி கோவிந்தா என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தை பார்த்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்..குறிப்பாக திருப்பதி தேவஸ்தானம் மூலமாக திருப்பதியில் நடக்கும் பல்வேறு தரிசனங்களை காண்பதற்கு ஏற்பாடு செய்து தருவதாக அந்த சமூக வலைதள பக்கத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இதனை நம்பி அந்த சமூக வலைதள பக்கத்தை நிர்வகிக்கும் நபரிடம் பேசிய போது, தனது பெயர் குமார் எனவும் , மேல் திருப்பதியில் வசித்து வருவதாகவும் திருப்பதி தேவஸ்தானத்திற்காக வேலை பார்த்து வருவதாகவும் சேட்டிங்க் மூலம் தெரிவித்ததாக பெண் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

தோமல தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தருமாறு பெண் மருத்துவர் சமூக வலைதளத்தின் மூலம் பேசிய குமார் என்பவரிடம்  கேட்டதாக தெரிவித்துள்ளார். திருப்பதி தேவஸ்தானத்தின் கண்காணிப்பாளர் மூலமாக கடிதம் பெற்று தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து தருவாதாகவும்,அதற்கு ஒவ்வொருக்கும் தலா 10 ஆயிரம் செலவாகும் என குமார் தெரிவித்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.

அதன் பின் பெண் மருத்துவர் தங்கள் குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு ,40 ஆயிரம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார். குமார் அனுப்பிய ஸ்கேன் கூடை பயன்படுத்தி பணத்தை செலுத்தியதாக தெரிவித்துள்ளார். அந்த ஸ்கேன் கோடில் ராஜேஷ் என பெயர் இருந்ததால் சந்தேகப்பட்டு கேள்வி எழுப்பியதாகவும் அவர் முன்னாள் திருப்பதி தேவஸ்தான ஊழியர் எனவும் பணி இடமாற்றம் ஆன பிறகு அவரது பெயர் இன்னும் மாற்றப்படவில்லை எனக் கூறியதாக பெண் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

தரிசனத்திற்கான குறுஞ்செய்தி வரும் என தெரிவித்து இரண்டு நாட்கள் ஆகியும் வராததால் சந்தேகப்பட்டு, சம்பந்தப்பட்ட நபருக்கு whatsapp மூலம் தொடர்பு கொண்டு பேசியதாகவும் செல்போன் அழைப்பின் மூலம் அழைத்த போது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாகவும், ஏமாற்றப்பட்டதை அறிந்து பெண் மருத்துவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனை எடுத்து பெண் மருத்துவர் அந்த சமூக வலைதள பக்கம் மற்றும் தொடர்பு கொண்ட நபர் செல்போனில் உள்ளிட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து புகார் அளித்துள்ளார். பலரும் அந்த சமூக வலைதளப் பக்கத்தை பின்பற்றி பணத்தை என தெரிவித்துள்ளார். சமூக வலைதள பக்கத்தின் ஐபி முகவரி மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை வைத்து சைபர் கிரைம் மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

அதிகாரப்பூர்வமாக திருப்பதியில் உள்ள தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட்டுகளை புக் செய்து பொதுமக்கள் பயன்பெறுமாறு இது போன்று போலி சமூக வலைதளப் பக்கத்தை நம்பி ஏமாற வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மக்களே உஷார்! இணையதளம் மூலம் பணமோசடி

MUST READ