Homeசெய்திகள்சென்னைசென்னையில் 6 மெட்ரோ நிறுத்தங்களை கைவிட முடிவு!

சென்னையில் 6 மெட்ரோ நிறுத்தங்களை கைவிட முடிவு!

-

சென்னையில் 6 மெட்ரோ நிறுத்தங்களை கைவிட முடிவு!

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

metro-work

தொடர்ந்து 2-வது கட்டமாக ரூ.63,246 ஆயிரத்து கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ இரயில் பாதை மற்றும் இரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

சென்னையில் முதல் கட்டத்தை தொடர்ந்து தற்போது போக்குவரத்து நெரிசலை மேலும் குறைப்பதற்காக வழித்தடம் 3- மாதவரம் முதல் சிப்காட் வரை 45.8கி.மீ நீளத்திற்கும்,வழிதடம் 4 – கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ நீளத்திற்கும்ல் வழித்தடம் 5 – மாதவரம் முதல் சொலிங்கநல்லூர் வரை 47 கி.மீ நீளத்திற்கும் என 80 உயர்த்தப்பட்ட ரயில் நிலையங்கள்,48 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் என மொத்தம் 128 இரயில் நிலையங்களுடன் கட்டப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை மாதவரம்- சிறுசேரி சிப்காட் இடையே மெட்ரோ ரயில் பாதையில் அமையவிருந்த டவர் சந்திப்பு, பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி, மாதவரம் தபால் பெட்டி, ஜோசப் கல்லூரி ஆகிய 6 நிறுத்தங்களை கைவிட மெட்ரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. 6 நிலையங்களும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கும் குறைவான இடைவெளியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்ததால் கைவிடப்படுகிறது.

 

 

MUST READ