Homeசெய்திகள்சென்னைஒடிசா ரயில் விபத்தில் வெளிப்படையான விசாரணை இல்லாதது ஏன்?- ஆ.ராசா

ஒடிசா ரயில் விபத்தில் வெளிப்படையான விசாரணை இல்லாதது ஏன்?- ஆ.ராசா

-

ஒடிசா ரயில் விபத்தில் வெளிப்படையான விசாரணை இல்லாதது ஏன்?- ஆ.ராசா

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஒடிசா ரயில் விபத்து குறித்து திமுக துணை பொதுசெயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது பேசிய ஆ.ராசா, “ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த ஒரு மணி நேரத்திற்குள் தமிழ்நாடு முதல்வர் ஒடிசா முதல்வரை தொடர்பு கொண்டு தமிழ்நாடு சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று கூறி அதற்க்கான நடவடிக்கையை முதல்வர் எடுத்து வருகிறார். மேலும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அங்கு கள நிலவரங்களை அறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்த விபத்தினை வைத்து திமுக அரசியல் செய்ய விரும்பவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடைபெற்றதா அல்லது ஊழியர்களின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டதா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். விளம்பரத்தை மட்டுமே நம்பியும் வெறும் பிம்பத்தை வைத்து மட்டுமே ஒன்றியத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ரயிலில் பயணம் செய்த தமிழ்நாட்டை சேர்ந்த பயனாளிகளின் பட்டியலை எடுத்து அவர்களை தொடர்பு கொண்டு அவர்களை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில் விபத்தில் வெளிப்படையான விசாரணை இல்லாதது ஏன்? ஒன்றிய அரசு வாய் மூடி மௌனமாக இருப்பது ஏன்? இந்த அரசாங்கம் ஆடம்பரத்திற்கும் தேவையற்ற விளம்பரத்திற்கும் மக்களை திசை திருப்புவதற்கு மட்டுமே முக்கியத்துவம் செலுத்தி வருகிறது.

Image

70,000 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்திய ரயில்வே பாதையில் இரண்டு சதவீதம் அளவில் கூட தொழில்நுட்ட வசதிகள் செய்யப்படவில்லை. தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு முதல்வர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மிக துரிதமாகவும் முதன்மையாகவும் எடுத்து மற்றவர்களுக்கு முன்னுதாரமாக திகழ்கிறார். விபத்து குறித்த விசாரணையை வெளிப்படை தன்மையுடன் செய்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி நாடாளுமன்றத்தில் இது குரித்து விவாதிக்க வேண்டும். விபத்தில் மரணித்த நபர்களின் குடும்பத்தாருக்கு தகுதியின் அடிப்படையில் ரயில்வே துறையில் வேலை பெற்று தருவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

MUST READ