Homeசெய்திகள்சென்னைதிமுக கவுன்சிலர் மின்சாரம் தாக்கி விபத்து-பாதிப்பான நிலையிலும் மக்கள் சேவை

திமுக கவுன்சிலர் மின்சாரம் தாக்கி விபத்து-பாதிப்பான நிலையிலும் மக்கள் சேவை

-

சென்னை அயனாவரம் பகுதி 99 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பரிதி இளம்ஸ்ருதி வீட்டில்  மின் கசிவு ஏற்பட்டு விபத்து

திமுக கவுன்சிலர் மின்சாரம் தாக்கி விபத்து

சென்னை மாநகராட்சியில் 99வது வார்டு மாமன்ற உறுப்பினராக பணியாற்றி வருபவர் பரிதி இளம்சுருதி. மழை வெள்ளம் புயல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே தனது வார்டு முழுவதும் வீதி வீதியாக சென்று மழை நீரை அகற்றும் பணியிலும் பொதுமக்களை மீட்டு முகாம்களை தங்க வைக்கும் பணிகளிலும் உணவுகள் வழங்கும் பணிகளிலும் 24 மணி நேரமும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை தனது இல்லத்தில் உள்ள AC யை போடுவதற்காக ட்ரிப்பரில் கை வைத்துபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக கை வைத்தவுடன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

உடனடியாக அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.இடது கையில் காயம் ஏற்பட்டு மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.இருந்தபோதிலும் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ்சில் 99 வது வார்டு பொதுமக்கள் மற்றும் கழகத் தோழர்களுக்கு வணக்கம் அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் எனது இல்லத்தில் ஏற்பட்ட மின்சாரம் கசிவின் காரணமாக மின்சாரம் தாக்கி நான் பாதிப்பு உள்ளாகி உள்ளேன்.

திமுக கவுன்சிலர் மின்சாரம் தாக்கி விபத்து-பாதிப்பான நிலையிலும் மக்கள் சேவை

மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருத்துவமனை செல்ல உள்ளேன் .எனவே குழுவில் உள்ள உறுப்பினர் அனைவருக்கும் ஏதேனும் குறைகள் இருந்தால் இக்குழுவில் பதிவிடவும் மாநகராட்சி அதிகாரிகள் அதை சரி செய்து தருவார்கள் என்னுடைய அலுவலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அலுவலக உதவியாளர்கள் களத்தில் உள்ளார்கள் மருத்துவ ஆலோசனை பெற்று மீண்டும் களத்தில் வந்து பணியாற்றுவேன் என பதிவிட்டுள்ளார்.தான் பாதிப்புக்குள்ளாகிய பொழுதிலும் தனது பகுதி மக்களுக்காக சேவை செய்யும் இவரது மனது பாராட்டிற்கு உரியதாக உள்ளது.

MUST READ