சென்னை மாதவரத்தில் 100 அடி சாலையில் தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஜெர்னி என்ற இளைஞன் அருகில் சென்று கொண்டிருந்த குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி, டயரில் உரசி பாதி தூரம் இழுத்துச் சென்று மயக்கம் அடைந்தார்.அப்போது மறுப்புறம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த திமுக மகளிரணி மாவட்ட அமைப்பாளர் லஷ்மி வேலு தடுப்பு சுவரை தாண்டி குதித்து குப்பை லாரியை நிறுத்தி இளைஞரை மீட்டார். பின்னர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
சாலையில் நடந்த விபத்தை கண்டு நமக்கென்ன என்று செல்லாமல், அவர் காலத்தினால் செய்த அந்த உதவிக்கு அவ்விளைஞரின் தாயார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். சாலையில் சென்று கொண்டிருந்த திமுக மகளிர் அணி எதிரே நடந்த விபத்தை கண்டு துரிதமாக செயல்பட்டு ஆம்புலன்ஸில் அனுப்பிய சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.
புதிய காவல் நிலையம் திறப்பு – தங்களது முதல் கோரிக்கையை வைத்த கிராம மக்கள்