பிரதமர் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்க தடை
பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் நாளை மறுநாள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை – கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் திட்டத்தை பிரதமர் மோடி நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார். இதற்காக தனி விமானம் மூலம் அவர் சென்னை வர உள்ளார்.
8 ஆம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு பிரதமர் சென்னை விமான நிலையத்திற்கு வருகிறார். விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையதையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். மாலை 4 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அங்கிருந்து மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் 125 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்க செல்லும் பிரதமர் அதனை முடித்து சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இதனையோட்டி சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தொடர் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சென்னை நகருக்கு உட்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க விட சென்னை மாநகர போலீசார் தடை விதித்துள்ளனர்.
சென்னையில் நிகழ்ச்சிகளை முடித்த பின்பு தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கர்நாடகாவுக்கு செல்கிறார்.