Homeசெய்திகள்சென்னைஅரை நிர்வாகமாக தூங்கும் போதை ஆசாமிகள்.பயணிகள் வேதனை

அரை நிர்வாகமாக தூங்கும் போதை ஆசாமிகள்.பயணிகள் வேதனை

-

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரை நிர்வாகமாக தூங்கும் போதை ஆசாமிகளால் பயணிகள் வேதனை.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாநிலம் மாவட்டங்கள் மற்றும் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் வேலைக்கு செல்பவர்கள்,கல்லூரி செல்லும் பெண்கள் என ஏராளமாக வந்து செல்கின்றனர். மேலும் கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்திலேயே மெட்ரோ ரயில் நிலையம் உள்ளதால் அதிக மக்கள் வருவது வழக்கம். இந்நிலையில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் இரவில் பேருந்து கிடைக்காத நிலையில் பேருந்து நிலையத்திலேயே தங்கி காலையில் பேருந்தில் செல்கின்றனர். ஆதரவற்றோரும் இரவு நேரங்களில் பேருந்து நிலையத்தில் தூங்குகின்றனர்.

இதைப்பயன்படுத்தி குடிமகன்கள் ,செல்போன், செயின் பறிப்பவர்கள் வழிபறிகள் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பேருந்து நிலையத்தை கூடாரமாக பயன்படுத்தி கொள்கின்றனர். இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் மக்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது.

அரை நிர்வாகமாக தூங்கும் போதை ஆசாமிகள்.பயணிகள் வேதனைஇதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் இரவு நேரங்களில் போதை ஆசாமிகள் மற்றும் ரவுடிகள் அங்கேயே மது அருந்துவதாகவும், பாட்டில்களையும் ,சாப்பிட்டுவிட்டு இலையையும் ஆங்காங்கே வீசுவதாகவும் ,அதனால் துர்நாற்றம் ஏற்படுவதாகவும் கூறினர்.மேலும் மது அருந்திவிட்டு ஆசாமிகள் அரைநிர்வாணமாக தூங்குகின்றனர். இதனால் பயணிகள் மற்றும் பெண்கள் அச்சப்படுவதாக கூறினர்.ரவுடிகளையும் போதை ஆசாமிகளையும் குற்றச்சம்பவங்ககளில் ஈடுபடுபவர்களையும் போலீசார் உடனடியாக அகற்ற வேண்டும்,என்றும் கோரிக்கை விடுத்தனர்.

MUST READ