Homeசெய்திகள்சென்னைபோதையில்லா தமிழகம் விழிப்புணர்வு - சென்னையில் 2-வது இரவு மாரத்தான்

போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு – சென்னையில் 2-வது இரவு மாரத்தான்

-

- Advertisement -

ஆவடியில் 2-வது இரவு மாரத்தான்.இதில் மாற்று திறனாளிகள் கலந்து கொண்டது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு - சென்னையில் 2-வது இரவு மாரத்தான்போதையில்லா தமிழகம் என்பதை வலியுறுத்தி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் 2-வது முறையாக இரவு மாரத்தான் ஓட்டம் ஆவடி வீராபுரம் வேல்டெக் கல்லூரியில் தொடங்கி சென்னை வெளிவட்ட சாலை நெமிலிச்சேரி சுங்க சாவடி வரை மூன்று பிரிவுகளில் நடைபெற்றது.ஆவடி மற்றும் சென்னை காவல் ஆணையரகம் சார்பில் 6000கும் மேற்பட்டோர் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

தமிழகத்தில் போதையில்லா தமிழகம் என்பதை முன்னிறுத்தி பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக சென்னை மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்கள் சார்பில் தனியார் அமைப்புடன் இணைந்து இந்த இரவு மாரத்தான் போட்டி சென்னை காவல் ஆணையாளர் சந்திப்ராய் ரத்தோர் பங்கேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு - சென்னையில் 2-வது இரவு மாரத்தான்மேலும் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு உற்சாகமூட்டினார்.இந்த இரவு மாரத்தான் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா,கேரளா,மகாராஷ்டிரா, ஒரிசா,ராஜஸ்தான், உத்திரபிரேசம்,அந்தமான் & நிகோபார் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த ஆண்கள்,பெண்கள் காவலர்கள் என 6000 வீரர்கள் 21 கிலோமீட்டர்,10 கிலோமீட்டர்,5  கிலோமீட்டர் என்ற மூன்று பிரிவுகளில் பங்கேற்று ஓடினர்.

போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு - சென்னையில் 2-வது இரவு மாரத்தான்முன்னதாக வீரர்கள் வந்து செல்ல ஆவடி ரயில் நிலையம் மற்றும் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.இந்த இரவு மாரத்தான் போட்டி வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நடைபெற்றது.இதற்காக ஒரு வழி பாதையாக மாற்ற பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு - சென்னையில் 2-வது இரவு மாரத்தான்இரு காவல் ஆணையரகங்கள் சார்பில் நடைபெற்ற இரவு மாரத்தான் போட்டியானது சென்னையில் 2-வது முறை நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது. மேலும் இறுதியாக மாரத்தான் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் மகிழ்ச்சியாக மேடையில் இணைந்து நடனம் ஆடியது அனைவரையும் மகிழ்ச்சிக்குள் ஆழ்த்தியது.

MUST READ