Homeசெய்திகள்சென்னைஇரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா 29ஆம் தேதி நடைபெறுகிறது -  பழ. நெடுமாறன் அறிவிப்பு

இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா 29ஆம் தேதி நடைபெறுகிறது –  பழ. நெடுமாறன் அறிவிப்பு

-

- Advertisement -

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா வருகிற 29ஆம் தேதி நடைபெறவிருக்கிறது என பழ. நெடுமாறன், உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் அறிவித்துள்ளாா்.இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா 29ஆம் தேதி நடைபெறுகிறது -  பழ. நெடுமாறன் அறிவிப்புசென்னை  சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு விழா வருகிற 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது என்று நூற்றாண்டு விழா குழுவினர் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்திப்பில் அறிவித்துள்ளாா். தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தானு, இயக்குனர் வ.கௌதமன் மற்றும் விழா குழுவினர் வருகை தந்திருந்தனா்.

நல்லகண்ணு நூற்றாண்டு விழா மின் அழைப்பிதழ் வெளியிட்டார் தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு. நல்லகண்ணு நூற்றாண்டு விழா மின் அழைப்பிதழை என்னை அழைத்து வெளியிட்டு சிறப்பு செய்த  பழ.நெடுமாறனுக்கு  நன்றி தெரிவித்தாா். நூற்றாண்டு கொண்டாடும் நல்லக்கண்ணுவுடன் வாழ்கின்ற,  வளர்கின்ற, சில செயல்களில் ஈடுபட்ட பாக்கியம் கிடைத்துள்ளது. அவருக்கு இப்படி ஒரு நூற்றாண்டு விழாவை எடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்‌ மூத்த தோழர் இரா. நல்லகண்ணு குறித்து வாழ்த்து பாடலை முதலமைச்சர் மு க ஸ்டாலின் 29- ஆம் தேதி வெளியிடுகிறார்.இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா 29ஆம் தேதி நடைபெறுகிறது -  பழ. நெடுமாறன் அறிவிப்புஅதனை தொடர்ந்து பழ. நெடுமாறன் மேடையில்  பேசியதாவது , ”அகில இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் புகழ்பெற்ற ராஜாஜி, பெரியார் திரு வி கா, காமராஜர், அண்ணா, கலைஞர் எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜீவா, ஸ்ரீ ராமமூர்த்தி போன்ற பல தலைவர்கள் நம் இனத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.அவர்களின் வாழ்க்கையை விட நமக்காக பொதுவுடமைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் தோழர் நல்லகண்ணு இவர்கள் யாருக்கும் அவர்கள் வாழும்போதே நூற்றாண்டு விழா கொண்டாட முடியவில்லை.

மார்க்சிஸ்ட் தலைவர் தோழர் சங்கர்ய்யா, நல்லகண்ணு ஆகிய இருவரும் பொதுவுடமைக்காக  நூறாண்டு காலம் வாழ்ந்ததுள்ளனர். இவர்கள் வாழ்ந்த காலத்தில் நம் வாழ்கிறோம் என்பதே நமக்கு பெருமைதான். நல்ல கண்ணணு நூற்றாண்டு விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 29- ஆம் தேதி  தொடங்கி வைக்கிறார். உலகம் முழுவதும் அனைத்து தரப்பு சேர்ந்த மக்களும் இவ்விழாவில் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த விழாவில் யாரும் ஒதுக்கப்படவில்லை அனைவரும் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.  அழைத்த போது சொன்ன உடனே மகிழ்ச்சியுடன் அத்தனை பேரும் வருகிறார்கள் என்றனர்.

மாமனிதருக்கு நடைபெறுகிற விழா தமிழகத்தில் இதுதான் முதல் தடவை. ஒரு தமிழருக்கு முதன் முதலில் பெருவிழா நடைபெற இருக்கிறது அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும். நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்பவர்கள் – மக்கள் போராளி மேதா பட்கர் , முன்னாள் நீதியரசர் சந்துரு, முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, வைகோ, திருமாவளவன், வேல்முருகன்(தவாக ), சைதை துரைசாமி, கு.செல்வப் பெருந்தகை, மயில்சாமி அண்ணாதுரை, தமிழறிஞர் வீ.அரசு, இயக்குனர் பாரதிராஜா,  கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர். காசி ஆனந்தன் , இயக்குநர் வெற்றிமாறன், விஜய் சேதுபதி,நக்கீரன் கோபால், பர்வீன் சுல்தானா, செய்தி ஆசிரியர் திருமாவேலன் ,ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா கலைவாணர் அரங்கத்தில் 29- ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் அன்பளிப்பு, இடிக்க மனம் இல்லாமல் அப்படியே உயர்த்திய மகன்

 

MUST READ