Homeசெய்திகள்சென்னைஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும் - தேரணிராஜன்

ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும் – தேரணிராஜன்

-

முறையற்ற உணவுப் பழக்கத்தால் சர்க்கரை நோய், மாரடைப்பு போன்றவை ஏற்படுவதாக  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தலைவர் தேரணிராஜன் தெரிவித்தார்.

ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும் - தேரணிராஜன்ஊட்டச்சத்து கல்வி தொடர்பான நிகழ்ச்சி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது. முறையற்ற உணவு பழக்கங்களால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படும் விதமான பதாகைகளை ஏந்திவாறு மாணவர்கள் மருத்துவ வளாகத்தில் பேரணி நடத்தினர். இதை தொடர்ந்து ஊட்டசத்து நிறைந்த உணவு உட்கொள்வதன் அவசியம் குறித்து ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையின் தலைவர் தேரணிராஜன் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீரழிவு நோய், ரத்த அழுத்தம், மரடைப்பு போன்ற நோய்களுக்கு முறையற்ற உணவு பழக்க முறை தான் காரணமாக இருக்கிறது என்றார். எனவே  ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தான் சர்க்கரை நோய் வரும் காலம் இருந்தது. தற்போது குறைந்த வயதிலேயே இது போன்ற நோய்கள் எல்லாம் வரக்கூடிய நிலையில், நாம் ஆரோக்கியமான உணவும் முறையான உணவுப் பழக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்காக வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக தேரணிராஜன் கூறினார்.

இன்றுவரை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு 600 பேர் வருகின்றனர் மேலும் அது கூடும். இந்தியாவில் டயாபடீஸ் தலைநகரமாக தமிழ்நாடு இரண்டாம் இடம் வந்து கொண்டிருக்கிறது. அதை கட்டுப்படுத்த வரும் முன் காப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்

முன்னோர்கள் 90 வயது வரை வாழ்ந்தார்கள். ஆனால் தற்போது இளம் வயதிலேயே இருதய நோய் வருகிறது. உணவு பழக்க வழக்க முறைகளால் தான் 40 முதல் 50 வயதிலேயே சர்க்கரை நோய் வருகிறது.

பிறக்கும் குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மற்றும் இணை உணவு கொடுத்தால் தான் ஊட்டச்சத்துடன் வளரும். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, தேவையான அளவு மாமிசம் எடுத்துக்கொண்டால் ஊட்டச்சத்து குறைபாடு குறைய வாய்ப்புள்ளது

இதை தொடர்ந்து பேணிய நீரிழிவு உயர்நிலை மருத்துவர்  தர்மராஜ், உடற்பருமன் அதிகரிப்பதால் தான் மெட்டபாலிஸ் நோய்கள் அதிகரிக்கிறது. முறையான நேரத்தில் சரியான உணவை எடுத்துக் கொள்ளாததால் தான் உடற்பருமன் அதிகரிக்கிறது என்றார்

மேலும், மன அழுத்தம், தூக்கமின்மை, உணவுப் பழக்கம் போன்றவற்றால் தான் உடல் பருமன் அதிகரித்து சர்க்கரை நோய் மட்டுமல்லாமல் பிற நோய்களுவிட்டதும் வருகிறது. வாரத்தில் ஒரு நாள் மாமிச உணவு சாப்பிடும் காலம் மாறி தினசரி சாப்பிடும் நிலை வந்து விட்டது என்றார்.

MUST READ