Homeசெய்திகள்சென்னைஎடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர்!

எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர்!

-

- Advertisement -

சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம் எல் ஏ, எம் பி மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்( Addl.sessions 3rd)  நீதிபதி ஜெயவேலு முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகிறார்.

எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர்!திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்காக,எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராக உள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை எனக் கூறிருந்தார்.

இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர்!இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜராக உள்ளார்.

MUST READ