சென்னை கடற்காரை – தாம்பரம் இடையே நாளை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதால், தாம்பரத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள், பல்லாவரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால், நாளை அந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்துக் கழகம் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 பேருந்துகள் நாளை இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
அதன்படி, தாம்பரத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது. இதேபோல், தாம்பரத்திலிருந்து தியாகராய நகர் பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகளும், பிராட்வே பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் மாநகர் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.