Homeசெய்திகள்சென்னைமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலும் உடனடியாக சீரமைப்போம்- மேயர் பிரியா

மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலும் உடனடியாக சீரமைப்போம்- மேயர் பிரியா

-

சென்னையில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலும் அதனை உடனடியாக மாநகராட்சி அப்புறப்படுத்தும் என்ற உத்தரவாதத்தை வழங்குகிறோம் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.

மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலும் உடனடியாக சீரமைப்போம்- மேயர் பிரியாசென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4 ஆம் மற்றும் 5 ஆம் வகுப்புகளில் பயிலும் 24,700 மாணவர்களை சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு ரூ. 47.25 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2024 -25 ஆம் கல்வி ஆண்டில் 208 சென்னை தொடக்க மற்றும் 130 நடுநிலைப் பள்ளிகளில் பயின்று வரும் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மொத்தம் 24,700 மாணவர்கள் ஆவர். அந்த மாணவர்களில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலுகின்ற 206 தொடக்கப்பள்ளிகளில் முதற்கட்டமாக 16,366 மாணவர்கள் உள்ளனர். அந்த வகையில் இன்று  (ஜூலை 2024) முதல் டிசம்பர் 2024 சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். இதனை பெருநகர சென்னை மாநகராட்சி வளாகத்தில் மேயர் பிரியா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இச்சுற்றுலாவானது மண்டலம் 1ல் தொடங்கி வாரந்தோறும் மண்டல வாரியாக பெருநகர சென்னை மாநகராட்சி 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களை ஒரு பேருந்துக்கு சுமார் 50 மாணாவர்கள் வீதம் பள்ளியில் பயிலும் மாணாக்கர்கள் எண்ணிக்கைகேற்ப 298 பேருந்துகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மாநகர போக்குவரத்து கழகம் மூலமாக 298 பேருந்துகள் மூலம் முதற்கட்டமாக ரூ. 31,29,000/- செலவில் சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

சுற்றுலாவானது சம்பந்தப்பட்ட உதவி கல்வி அலுவலர்கள் மூலமாக சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, இந்த சுற்றுல்லா பாதுகாப்பாக தமிழ்நாடு அரசு, மாநகார போக்குவரத்து கழகம் மூலமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள சென்னை சிறுவர் பூங்கா, பிர்லா கோலாரங்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம், குழந்தைகள் பூங்கா, காவலர் அருங்காட்சியம்(போலீஸ் மீயூசியம்), செம்மொழி பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, பெரம்பூர் ரயில்வே அருங்காட்சியம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று வரப்படும்.

இன்று மண்டலம் 1 முதல் 5 வரையில் உள்ள 16 சென்னை 1 தொடக்கப்பள்ளிகளில் இருந்து 1255 மாணவர்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக 72 ஆசிரியர்கள் இந்த சுற்றுலாவில் செல்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு கல்வி மற்றும் பொது அறிவு சிந்தனை மற்றும் மகிழ்ச்சிகரமான எண்ணங்கள் உருவாக்கும் வகையிலும் இருக்கும்.

 

இந்த தொடக்கப்பள்ளி மாணவர்களின் சுற்றுலாவானது டிசம்பர் 2024 கடைசி வாரம் முடிவடையும். இதனை தொடர்ந்து மீதமுள்ள 130 நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அடுத்த கல்வியாண்டில் இந்த சுற்றுல்லா தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சுற்றுலா செல்லும் மாணவர்களுக்கு குளிர்பானம் தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றை மேயர் பிரியா வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா, அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அங்கு சிலைகள் வைப்பது அதே போல் அங்குள்ள கலச்சாரத்தை பிரதபலிக்கும் வகையில் சென்னையில் அமைக்கப்படுவது குறித்தும் பேசினோம். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்க்கொள்ளப்படும்.

மாம்பலம் கால்வாய் மட்டுமல்ல பிற கால்வாய் பகுதிகளில் மெட்ரோ இரயில் பணிகள் மேற்க்கொள்ளப்படும் பணிகளை விரைந்து முடிக்கப்படும், அவர்களுடன் தொடர்பில் தான் உள்ளோம் என்றார். மேலும் ஒட்டேரி நல்லான் கால்வாயினை விரிவுபடுத்த துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். நீர்வளத்துறையுடன் பேசி உரிய நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்படும் என்றார். மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கும மேம்பால பணிகள் கூவம் ஆற்றின் நடுவில் மேற்க்கொள்ளப்படுவதால் மழைக்காலத்தில் நீர் பாதையில் தடுப்பு ஏற்படலாம் என்ற கேள்விக்கு, செப்டம்பருக்குள் முடிக்க வலியுறுத்தப்படுள்ளது என்றார்.

சென்னையில் மழை பெய்தால் வெள்ளம் ஏற்படாது என மாநகராட்சி உத்தரவாதம் அளிக்குமா என்ற கேள்விக்கு, சென்னையில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலும் அதனை உடனடியாக மாநகராட்சி அப்புறப்படுத்தும் என்ற உத்தரவாதத்தை வழங்குகிறோம்.

சென்னையில் டெங்கு அதிகரித்து வரும் நிலையில் கொசு ஒழிப்பு பணியில் சுணக்கம் உள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, சென்னையில் எந்த பகுதியில் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற புகார் சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார்.

MUST READ