புதுச்சேரியில் இருந்து சென்னை வந்த பேருந்தில் பயணத்தின் போது பெண்ணுக்கு நெஞ்சு வலி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜீப்பில் அழைத்து வந்து மருத்துவமனையில் சிகிச்சை.
பாண்டிசேரியில் இருந்து சென்னைக்கு வந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து இன்று (29.06.24) காலை 11:55 மணிக்கு திருவான்மியூர் தெற்கு நிழற்காலை அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது பெண் பயணி நெஞ்சு வலிப்பதாக நடத்துனர் முத்துக்குமரனிடம் கூறியுள்ளார். நடத்துனர் சம்பவ இடத்தின் அருகே வாகன தணிக்கை பணியில் இருந்த திருவான்மியூர் போக்குவரத்து காவல் நிலைய காவல் ஆய்வாளர் அசோகனிடம் தகவல் தெரிவித்தார்.
அந்த பெண் பணியை போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள் மீட்டு அவரது போலீஸ் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு, அருகில் இருந்த சென்னை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வந்து முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.