Homeசெய்திகள்சென்னைதொண்டர்களுடன் நெகிழ்ச்சி ! புத்தாண்டு வாழ்த்துகளை பெற்ற மு.க.ஸ்டாலின் !

தொண்டர்களுடன் நெகிழ்ச்சி ! புத்தாண்டு வாழ்த்துகளை பெற்ற மு.க.ஸ்டாலின் !

-

- Advertisement -
kadalkanni

புத்தாண்டு வாழ்த்துகளை பெற்ற மு.க.ஸ்டாலின் ! நீண்ட வரிசையில் நின்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தொண்டர்களுடன் நெகிழ்ச்சி ! புத்தாண்டு வாழ்த்துகளை பெற்ற மு.க.ஸ்டாலின் !

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களிடம் புத்தாண்டு வாழ்த்துக்களை பெற்றார். தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நேற்றைய தினம் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

அதில், புத்தாண்டாகிய 2025-இல் உலகெங்கும் அமைதி திரும்பட்டும். நம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும். இல்லந்தோறும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும்! தமிழ்நாடு அதற்கு வழிகாட்டும்! அனைவருக்கும் எனது உளம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று காலை முதல், ஆழ்வார்பேட்டை உள்ள தனது வீட்டில் தொண்டர்களை சந்தித்த மு க ஸ்டாலின் அவர்களிடம் புத்தாண்டு வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார். தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று முதலமைச்சருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இது போன்று மூத்த அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மூத்த தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் முதலமைச்சருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஃபுல் எனர்ஜியுடன் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

MUST READ