சென்னையில் விடிய விடிய பெய்த மழையால் விமான சேவைகள் பாதிப்பு
சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 10 விமானங்கள் தாமதாக புறப்பட்டன.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று மாலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் நேற்று நள்ளிரவிலும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது.
அதன்படி சென்னை தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 10 விமானங்கள் தாமதாக புறப்பட்டன. துபாய், சார்ஜா, துருக்கி நாடுகளில் இருந்து வந்த விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாததால் பெங்களூரு சென்றன!