Homeசெய்திகள்சென்னைவானத்தின் இளவரசி என்று அழைக்கப்படும் பெரிய ரக சரக்கு விமானம், முதல் முறையாக, ஜோர்டான் நாட்டிலிருந்து,...

வானத்தின் இளவரசி என்று அழைக்கப்படும் பெரிய ரக சரக்கு விமானம், முதல் முறையாக, ஜோர்டான் நாட்டிலிருந்து, சென்னைக்கு வந்தது

-

- Advertisement -

வானத்தின் இளவரசி என்று அழைக்கப்படும் பெரிய ரக சரக்கு விமானம், முதல் முறையாக, ஜோர்டான் நாட்டிலிருந்து, சென்னைக்கு வந்தது. சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கக்கூடியது என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுப்படுகிறது.வானத்தின் இளவரசி என்று அழைக்கப்படும் பெரிய ரக சரக்கு விமானம், முதல் முறையாக, ஜோர்டான் நாட்டிலிருந்து, சென்னைக்கு வந்தது

அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு, நேஷ்னல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சரக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த, பெரிய ரக சரக்கு விமானங்களில் ஒன்றான 747-400 ரக சரக்கு விமானம், ஜோர்டான் நாட்டின் அம்மான் விமான நிலையத்தில் இருந்து, சுமார் 124 டன் சரக்குகளுடன் புறப்பட்டு, நேற்று  சென்னை சர்வதேச விமான நிலைய சரக்ககம் பகுதிக்கு வந்து தரை இறங்கியது.

வானத்தின் இளவரசி என்று அழைக்கப்படும் மிகப்பெரிய ரக சரக்கு விமானம், சென்னையில் வந்து தரை இறங்கியது, சென்னை விமான நிலைய சரக்கக பகுதியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக சரக்கக பகுதி ஊழியர்கள், சிறப்பாக செயல்பட்டு, விமானத்தில் வந்த சரக்குகளை இறக்கியதோடு, சென்னையில் இருந்து துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய சரக்குகளையும் துரிதமாக ஏற்றி இறக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அதன் பின்பு அந்த விமானம் சென்னையில் இருந்து துபாய் வழியாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு புறப்பட்டு சென்றது.வானத்தின் இளவரசி என்று அழைக்கப்படும் பெரிய ரக சரக்கு விமானம், முதல் முறையாக, ஜோர்டான் நாட்டிலிருந்து, சென்னைக்கு வந்தது

இந்த சரக்கு விமானம் சுமார் 125 டன் சரக்குகளை ஒரே நேரத்தில் கையாளக்கூடியது. அதுமட்டுமின்றி இது பயணிகள் விமானமாகவும் இயக்கக்கூடியது. பயணிகள் விமானங்களாக இயங்கும் போது, ஒரே நேரத்தில் 660 பயணிகள் பயணிக்க கூடிய விமானமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சென்னை விமான நிலையம் சரக்குகளை திறம்பட கையாளுவதில், தற்போது உலக அளவில் சர்வதேச புகழ்பெற்ற ஒரு சரக்கக விமான நிலையமாக செயல்படுவதால், இதைப்போல் வெளிநாடுகளில் இருந்து, மிகப்பெரிய ரக சரக்கு விமானங்கள், சென்னைக்கு   வந்து செல்கின்றன. இது சர்வதேச சரக்கு விமான போக்குவரத்தில், சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கக்கூடியது என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

ஆவடி அருகே  பிரபல காலணி ஷோரூமில் தீ விபத்து- பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

MUST READ