Homeசெய்திகள்சென்னைசென்னையில் ஃபார்முலா 4 கார்பந்தயம் - காட்சிப்படுத்தப்பட்டுள்ள கார்கள் முன்பு செல்பி எடுத்து மகிழும் பொது...

சென்னையில் ஃபார்முலா 4 கார்பந்தயம் – காட்சிப்படுத்தப்பட்டுள்ள கார்கள் முன்பு செல்பி எடுத்து மகிழும் பொது மக்கள்

-

- Advertisement -

சென்னையில் ஃபார்முலா 4 கார்பந்தயம் - காட்சிப்படுத்தப்பட்டுள்ள கார்கள் முன்பு செல்பி எடுத்து மகிழும் பொது மக்கள்சென்னையில் ஃபார்முலா 4 கார்பந்தயம் , செல்பி எடுத்து மகிழும் பொது மக்கள்.

ஃபார்முலா 4 கார்பந்தயம், சென்னை காமராஜர் சாலையில் உள்ள நம்ம சென்னை செல்பி பாயிண்ட் அருகே காட்சிப்படுத்தப்பட்டுள்ள 2 கார்கள்.

சாலையில் செல்பவர்களும், கடற்கரைக்கு வந்தவர்களும், கார்பந்தய விளையாட்டின் மீது ஆர்வமுள்ள ரசிகர்களும் பந்தயத்தில் பங்கேற்க உள்ள காரின் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

சென்னையில் ஃபார்முலா 4 கார்பந்தயம் - காட்சிப்படுத்தப்பட்டுள்ள கார்கள் முன்பு செல்பி எடுத்து மகிழும் பொது மக்கள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் முதன்முறையாக மூன்று ஆண்டுகளுக்கு ஃபார்முலா 4 கார்பந்தயம் நடத்த கடந்த ஆண்டு (2023) ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த கார் பந்தயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில்    தி. நகர் அருகே நடைபெற இருந்தது.

அப்போது மிக்ஜாம் புயல் சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதன் காரணமாக இந்த கார் பந்தயத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் கார் பந்தயத்தை நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழை தீவிரம் அடையும் முன்னதாக வருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதி மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்த கார் பந்தயம் அண்ணா சாலையில் நடைபெறும் என்றும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஃபார்முலா-4 கார் பந்தயம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, ஆக.31-ம் தேதி காலை மட்டும் ஃபார்முலா-4 கார் பந்தயத்தை மக்கள் இலவசமாக பார்க்கலாம் எனவும் ஆக.31-ம் தேதி பிற்பகல் தகுதிச் சுற்று போட்டிகள் தொடங்கி இரவு வரை கார் பந்தயம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேலும் கார் பந்தயத்தை 8,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கார் பந்தயம் நடை பெறும்போது போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளர்.

சென்னையின் மையப் பகுதியான தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த போட்டி நடத்தப்பட உள்ளது.

அமெரிக்கா பன்னாட்டு திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படம் வெளியிடு

இதற்கான ஓடுதளம் சென்னையில் தீவுத்திடலையொட்டிய கொடி மரச்சாலையில் தொடங்கி ஓமந்தூரார் அரசினர் தோட்டம் வரையிலான அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவுச் சின்னம் ஆகியவற்றை உள்ளடக்கிய 3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை காமராஜர் சாலையில் நம்ம சென்னை செல்பி பாயிண்ட் அருகே பந்தயத்தில் பங்கேற்க உள்ள இரண்டு கார்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரைக்கு வருபவர்களும், சாலையில் செல்பவர்களும், கார் பந்தய விளையாட்டின் மீது ஆர்வம் உள்ள ரசிகர்களும் பந்தயத்தில் பங்கேற்க உள்ள கார்களின் முன்னே நின்று தங்களது குடும்பங்களுடன் புகைப்படம் எடுத்துக் மகிழ்ந்தனர்.

MUST READ