Homeசெய்திகள்சென்னைஇலவச மருத்துவ வாகனம் வழங்கியது இந்தியன் ஆயில் நிறுவனம்

இலவச மருத்துவ வாகனம் வழங்கியது இந்தியன் ஆயில் நிறுவனம்

-

- Advertisement -

தேசிய பார்வையற்றோர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு 10.23 லட்சம் மதிப்பில் இலவச மருத்துவ வாகனம்.

பூந்தமல்லியில் தேசிய பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மண்டல நிறுவனம் இயங்கி வருகிறது.மத்திய அரசின் சுகாதாரத் துறையின் கீழ் இயங்கி வரும் இந்த மையத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பார்வையற்ற மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

இலவச மருத்துவ வாகனம்-இந்தியன் ஆயில் நிறுவனம்இந்த நிறுவனத்திற்கு ரூ.10.23 லட்சம் மதிப்பில் புதிய நான்கு சக்கர மருத்துவ வாகனத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் சி.எஸ்.ஆர். நிதியின் கீழ் இலவசமாக வழங்கியது. இதன் மூலம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் அவசர மருத்துவ சேவைகளுக்கு இந்த மருத்துவ வாகனத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

இந்த மைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு பிராந்திய செயல் இயக்குநர் வி.சி. அசோகன்,  புதிய நான்கு சக்கர வாகனத்தை தேசிய பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மண்டல நிறுவனத்தின் மண்டல இயக்குனர் ஸ்ரீபிரியாவிடம் வழங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தேசிய பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மண்டல நிறுவனத்தின் இயக்குனர் மனிஷ்வர்மா கானொலி மூலம் வாழ்த்துரை வழங்கினார்.

இலவச மருத்துவ வாகனம்-இந்தியன் ஆயில் நிறுவனம்

நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அசீம் பெய்க், சரவணன் மற்றும் தேசிய பார்வையற்றோர்  மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மண்டல நிறுவனத்தின் அலுவலர்கள் மற்றும் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

MUST READ